.பாராளுமன்ற தேர்தலில் கூட்டு உறுதி ? வைகோவை சந்தித்து ஜெ. பேச்சு.

செவ், 02/19/2013 - 20:53 -- Velayutham

.பாராளுமன்ற தேர்தலில் கூட்டு உறுதி ?

வைகோவை சந்தித்து

ஜெ. பேச்சு

 

ம .தி .மு .க பொதுச்செயலாளர் வைகோ ,தமிழ்நாட்டில் பூரண மது ஒழிப்பு கோரி 2 –ம் கட்ட பாதயாத்திரையை நேற்று கோவளத்தில் தொடங்கினார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 250 கி.மீ.தொலைவு சென்று மதுவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும் அவர்,வருகிற 28-ல் மறைமலைநகரில் நிறைவுசெய்கிறார். 2 –ம் நாளாக இன்றுகாலை திருப் போருரில் இருந்து யாத்திரையை தொடர்ந்தார்.பிற்பகலில் பையனூர் அருகே தொண்டர்களுடன் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்புறத்தில் இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா காரில் வந்துகொண்டிருந்தார்.

வைகோவை பார்த்ததும் காரைவிட்டிறங்கி வந்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர் .வைகோ,தம் அருகில் நின்றிரு ந்த மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு ஆகியோரை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்

பின்னர் வைகோவிடம் விடைபெற்றுக்கொண்டு ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

காங்கிரஸ்,மற்றும் பா.ஜ.க வை ஜெயலலிதா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.தே.மு.தி.க.வுடன் கூட்டு இல்லை என்பது உறுதி செய்யப் பட்டுவிட்டது. இந்தநிலையில, அ.தி.மு.க.-ம.தி.மு.க.கூட்டு,பாராளுமன்ற தேர்தலில் உறுதி என்பதற்கான அறிகுறிதான் இந்த சந்திப்பு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

 

 

 

 

 

தமிழ்

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்