இலங்கைப் பிரச்னை: நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக எம்.பி.க்கள் கோஷம்

வியா, 02/21/2013 - 13:45 -- Velayutham

 

 
 
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை உரையாற்ற தொடங்கியபோது, இலங்கை இனப்படுகொலையை கண்டித்து திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.
 
கோஷம் எழுப்பிய தமிழக எம்.பி-க்களை மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, மத்திய இணை அமைச்சர்கள் வே. நாராயணசாமி, ராஜீவ் சுக்லா ஆகியோர் சமாதானப்படுத்தி இருக்கையில் அமரச் செய்தனர்.ஆனால், இந்த அமளியைக் கண்டுகொள்ளாமல் தனது உரையை பிரணாப் முகர்ஜி தொடர்ந்து வாசித்தார்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்