இந்தியா அபார வெற்றி

செவ், 02/26/2013 - 11:09 -- Velayutham

சென்னை

சென்னை டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தயா அபார வெற்றிபெற்றுள்ளது.சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
 
போட்டியின் ஐந்தாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்து  ஆடிய ஆஸ்திரேலியா 241 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதை அடுத்து முதல் இன்னிங்க்ஸ் கூடுதல் சேர்த்து, 50 ரன் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், சேவாக் இருவரும் 6, 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 36 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சச்சின், தான் சந்தித்த முதல் இரு பந்துகளில் இரு சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார். இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் தோனி 224 ரன்கள் எடுத்தது, ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்க்ஸில் 7 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்க்ஸில் 5 விக்கெட்டும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது.224 ரன்கள் குவித்த தோனி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
 
 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்