நாடாளுமன்ற தாக்குலுக்காக வெட்கப்பட வேண்டியதில்லை: அப்சல் குரு எழுதிய கடிதம்

புத, 02/27/2013 - 08:37 -- Velayutham

 

 
 
நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக வெட்கப்படத் தேவையில்லை என்று அப்சல் குரு உருது வாரப் பத்திரிகைக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு பிப்ரவரி 9-ஆம் தேதி தில்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில், ஸ்ரீநகரில் இருந்து வெளியாகும் உருது வாரப் பத்திரிகைக்கு அப்சல் குரு எழுதிய கடிதத்தை விளக்கி, அதன் ஆசிரியர் ஷப்னம் கயூம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி வருமாறு:
அப்சல் குருவிடம் இருந்து கடிதங்களும், கட்டுரைகளும் எனக்கு வந்துகொண்டிருந்தன. அதேபோல, நாடாளுமன்ற தாக்குதல் குறித்த கடிதமும் அப்சல் குருவிடம் இருந்து எனக்கு கிடைத்தது. முந்தைய கடிதங்கள் மற்றும் கட்டுரைகளில் இருந்த கையெழுத்தும், இந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்தும் ஒரே மாதிரியாகவே உள்ளனஇந்தக் கடிதத்தை வெளியிடுவதற்கு உகந்த சூழ்நிலை இது தான் என்று, அப்போது (நான்கு ஆண்டுகளுக்கு முன்பு) நான் உணரவில்லை. ஏனெனில், இதை வெளியிட சில ஆதாரங்கள் தேவைப்பட்டன. இப்போது அப்சல் குரு உயிரோடு இல்லை என்பதால் ஆதாரங்கள் தேவைப்படவில்லை. எனவே, அந்தக் கடித விவரத்தை வெளியிட முன்வந்தேன்.
குருவின் கடிதத்தில்," டிசம்பர் 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தை கூட்டுசதி என்று குறிப்பிட வேண்டாம் என்று, செய்யது சலாஹுதீனிடம் (ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர்) கேட்டுக்கொண்டுள்ளேன்.
இந்தியாவில் நடந்த தாக்குதல்கள் அனைத்தும் காஷ்மீர் பிரச்னையுடன் தொடர்புடையவை. எனவே, இந்தத் தாக்குதல் கூட்டுச்சதி என்றால், மொத்தப் போராட்டமும் கூட்டுச்சதி என்றாகி விடும்.
டிசம்பர் 13-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்காக நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படாமல் இருக்கும் வரை, இந்தியாவும், ஆட்சியாளர்களும் தாற்காலிக அமைதியை மட்டுமே கொண்டிருப்பர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்