விடைபெற்றார் போப் ஆண்டவர்: ஏராளமானோர் வழியனுப்பினர்

வியா, 02/28/2013 - 00:37 -- Velayutham

 

 
போப் ஆண்டவர் 16-ஆம் பெனடிக்ட் விடைபெற்றுச் சென்றார். ஏராளமானோர் யாத்திரிகர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.
 
போப் ஆண்டவர் 16-ஆம் பெனடிக்ட் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர்.போப் ஆண்டவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து விடைபெற்றுச் சென்றார். வாடிகன் நகரத்துக்கு புனிதப் பயணம் வந்திருந்த லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் அவரை அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.அவர் வாடிகன் பிளாசாவை சுற்றி வந்தபோது, அங்கிருந்த குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதற்காக தனது வாகனத்தை நிறுத்தினார். குழந்தைகளுக்கு முத்தம் தந்து வாழ்த்தினார்.
பெரியவர்கள் பலர் பதாகைகளை பிடித்திருந்தனர். தவிர, பிரமாண்டமான பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. அதில்,""பென்டிக்ட் நாங்கள் உங்களை இழக்கிறோம்'', ""இந்த நகரத்தின் இதயம் போப் ஆண்டவர்'' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. நகரம் முழுவதும் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. ""கடவுள் நமக்கு சூரியனையும், வெளிச்சத்தையும் தந்துள்ளார். இயல்பான நேரங்களில் அனைத்துமே நன்றாகவே நடந்துள்ளன. புயல் மற்றும் பேரலை தருணங்களிலும் நம்மை ஆண்டவர் காப்பாற்றினார். என்றும் அவர் நம்மோடு துணை இருப்பார்.
 
வாழக்கை என்னும் படகில் நாம் பயணம் செய்கிறோம். அந்தப் படகில் எப்போதும் கடவுள் கூடவே வருகிறார் என்பதை நான் அறிவேன். இந்த தேவாலயம் (சர்ச்) என்ற படகு எனக்கு மட்டுமோ அல்லது உங்களுக்கு மட்டுமோ சொந்தமானது அல்ல. இது கடவுளுடையது. இதை அவர் மூழ்கவிட மாட்டார். இந்தப் தேவாலயத்துடனான எனது தொடர்பு விட்டுப்போகாது. பிரார்த்தனை மற்றும் பிரதிபலிப்புடன் தொடரும்,'' என்று கூட்டத்தினர் மத்தியில் போப் ஆண்டவர் உரையாற்றினார். 
 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்