இந்திய எல்லைக்குள் ஊடுருவல் : சல்மான் குர்ஷித் சீனா பயணம்

வியா, 04/25/2013 - 14:20 -- Velayutham

 

இந்திய எல்லையான லடக் பகுதிக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்திருக்கும் நிலையில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மே 9ம் தேதி சீனா செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன வீரர்கள் நுழைந்து முகாமிட்டிருப்பதாக இந்தியா கூறியுள்ள குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளது சீனா.

இது இந்திய ராணுவத்தின் கற்பனையல்ல. இந்திய எல்லைப் பகுதியான டௌலட் பெக் ஓல்டி அருகே சீன வீரர்கள் முகாமிட்டிருப்பதையும், அவர்களது நடமாட்டத்தையும், இந்தியாவின் ஆளல்லா வாகனம் மூலம் இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ கமாண்டர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், சீனா சென்று முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சல்மான் குர்ஷித் சீனா செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்