பா.மா.க வெளிநடப்பு

வியா, 05/02/2013 - 11:30 -- Velayutham

 

 
சென்னை
 
தமிழக சட்டபேரவையிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளிநடப்பு செய்தது.
 
பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கலையரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது.
 
சபாநாயகரிடம் ஜெ. குரு எம்.எல்.ஏ. கைது தொடர்பாக ஒரு உரிமை மீறல் பிரச்சினை கொடுத்திருந்தேன். அதை விவாதத்துக்கு எடுக்கும்படி கேட்டேன். ஆனால் அனுமதி மறுத்துவிட்டார். கடந்த 28-8-12 அன்று காஞ்சீபுரம் மாவட்டம் தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தேடியதாகவும், 10-4-2013 முதல் அவர் தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அதனால் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் எங்கும் தலைமறைவாக இருந்ததில்லை. 28-8-2012 முதல் 10-4-2013 வரை உள்ள கால கட்டத்தில் பல்வேறு கூட்டங்களில் அவர் பேசியுள்ளார். 
 
மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் பெருவிழா கூட்டத்தில் கூட அவர் பேசியுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சட்ட சபையிலேயே குரு பங்கேற்று பேசி இருக்கிறார். அவரை தலைமறைவு குற்றவாளி என போலீசார் இப்போது கைது செய்திருப்பது வியப்பாக உள்ளது. எனவே குரு மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டு

 

Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்