பன்னாட்டு மையம் :முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ், 05/14/2013 - 11:56 -- Velayutham
சென்னை
 
பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைகழகத்தில் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்
 
1. பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசும், காமன்வெல்த் 
பல்கலைக்கழகச் சங்கமும் இணைந்து கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா 
மகளிர் பல்கலைக்கழகத்தில் """"தமிழ்நாடு காமன்வெல்த் அன்னை தெரசா மகளிர் 
பன்னாட்டு மையம்"" என்ற பெயரில் ஒரு பன்னாட்டு மையம் தொடங்கப்படும். இந்த
மையத்திற்கான நிலத்தினை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் வழங்கும்;
கலை நயத்துடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக 5 கோடி 
ரூபாய் நிதி உதவியை தமிழக அரசு வழங்கும். இந்த மையம் மாணவிகளுக்கும் 
ஆசிரியர்களுக்கும் பன்னாட்டு கல்வி அனுபவத்தை வழங்கும். 
2. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், நிலையான 
வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கும் வகையில், 2013-2014 ஆம் 
ஆண்டில், தகுதியான மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான 
கூட்டமைப்புகளுக்கு 6000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும். 
3. மக்கள் நிலை ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு கடன் மீட்பு, 
மருத்துவ உதவி மற்றும் சிறிய வாழ்வாதாரங்களை மேற்கொள்வதற்கு உதவும் 
வகையிலும், திறன் வளர்ப்பு நடவடிக்கைகளுக்காகவும் 2323 கிராம வறுமை ஒழிப்பு 
சங்கங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் 232 கோடியே 30 லட்சம் ரூபாய் 
சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். 
4. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள சுய உதவிக் 
குழுக்களுக்கு உறுதுணையாக இருந்து வழி நடத்திடவும், அவர்களின் 
செயல்பாடுகளை கண்காணித்திடவும் தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெறும் ஊராட்சி 
அளவிலான 4000 கூட்டமைப்புகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 40 கோடி 
ரூபாய் ஊக்க நிதி வழங்கப்படும். 
5. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டு 
வரும் 60 வட்டாரங்களில் 25,000 சுய உதவிக் குழுக்களுக்கும், புதுவாழ்வுத் திட்டம் 2
செயல்படுத்தப்பட்டு வரும் 120 வட்டாரங்களில் 25,000 சுய உதவிக் 
குழுக்களுக்கும் தொடர் கல்வித் திட்டம் மற்றும் பெண்கள் எழுத்தறிவுத் திட்டம் 
ஆகிய திட்டங்களின் ஒத்துழைப்புடன் படிப்பறிவு, எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு 
பயிற்சி அளிக்க 9 கோடியே 50 லட்சம் ருபாய் வழங்கப்படும். 
6. சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்களின் விற்பனையை மேம்படுத்த 100 """"மதி"" 
நடமாடும் அங்காடிகள் மற்றும் விற்பனை மையங்கள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 
நிறுவப்படும். 
7. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட 
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு 
நிர்வாகிகளுக்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் பாலின பயிற்சி 
வழங்கப்படும். 
8. சுய உதவிக் குழு பெண்கள் மூலம் சூரிய சக்தி சாதனங்கள் பயன்பாட்டினை 
ஊக்குவித்தல் மற்றும் பராமரிக்கும் வகையில் 2013-14-ஆம் ஆண்டில், 
ஒரு வட்டாரத்திற்கு 10 பெண்கள் வீதம் 4000 பெண்களுக்கு 1 கோடியே 
60 லட்சம் ரூபாய் செலவில் பயிற்சி வழங்கப்படும். 
9. சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் இருந்து 
1,000 வங்கி முகவர்கள் உருவாக்கப்படுவர். 
10. சுகாதார சேவைகள் அனைவரையும் சென்றடையும் வகையில், 6300 சுய உதவிக் 
குழு பெண்களுக்கு 19 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார சமூக 
வல்லுநர் ஆவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் 88 லட்சத்து 
19 ஆயிரம் பெண்கள் மத்தியில், """"தொற்றா நோய்கள்"" குறித்த விழிப்புணர்வு 
ஏற்படுத்தப்படும். 
11. 1994-95 ஆம் ஆண்டு நான் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த போது 
துவக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கான கல்வி 
ஊக்குவிப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ், 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவியருக்கு ஆண்டொன்றுக்கு 500 ரூபாயும், 6ஆம் வகுப்பு பயிலும் 
மாணவியருக்கு ஆண்டொன்றுக்கு 1000 ரூபாயும் கல்வி ஊக்குவிப்புத் 
தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டம் இந்த ஆண்டு முதல் 
ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 
மாணவியர்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படுகிறது என்பதை 
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி ஏழாம் வகுப்பு மற்றும் 
எட்டாம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியருக்கு 
ஆண்டொன்றுக்கு 1500 ரூபாய் ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும். இதன் 
மூலம் 2 லட்சத்து 77 ஆயிரம் மாணவியர் பயனடைவர். 
12. தமிழ்நாட்டில் உள்ள 76 ஆதி திராவிடர் நல மாணவியர் கல்லுhரி விடுதிகளில் தங்கி 
பயிலும் மாணவியர் தங்கள் உடமைகளை துவைப்பதற்காக அன்றாடம் அதிக நேரம்
செலவிடுகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டு, இவர்கள் கல்வியில் தங்களது 
கவனத்தை முழுமையாக செலுத்தும் வகையில், இவ்விடுதிகளுக்கு துணிகளை 
துவைப்பதற்கு சலவை இயந்திரங்கள் வழங்கப்படும். 
13. 8406 ஆதிதிராவிடர் இன மகளிரை உறுப்பினர்களாகக் கொண்ட மகளிர் தொழில் 
தையல் கூட்டுறவு சங்கங்களில் உள்ள பழமையான தையல் இயந்திரங்கள் மூலம் 3
அவர்களால் தற்போது மாணவ, மாணவியர்களுக்கு அதிகரித்து வழங்கப்படுகின்ற 
4 ஜோடி சீருடைகளை உரிய நேரத்தில் தைத்துக் கொடுக்க இயலவில்லை. 
மாணவ, மாணவியர்களுக்கான சீருடைகளை உரிய நேரத்தில் தைத்துக் கொடுக்க 
ஏதுவாக, இவர்களுக்கு நவீன தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என்பதை 
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக திட்டத் தொகையில் 70 
விழுக்காடு விளிம்புக் கடனாக, அதாவது ஆயசபin ஆடிநேல ஆக 4 விழுக்காடு 
வட்டிக்கு தாட்கோ மூலம் வழங்கப்படும். இதற்கான செலவினத் தொகையான 8
கோடியே 83 லட்சம் ரூபாய் தாட்கோ பங்கு மூலதனத்தில் இருந்தும், மீதமுள்ள 30 
விழுக்காடு சிறப்பு மைய நிதி உதவியில் இருந்தும் வழங்கப்படும். 
14. வெளியூரில், குறிப்பாக மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் பெருநகரங்களில் 
பணிக்குச் செல்லும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான 
உறைவிடங்கள் அதிகமாக தேவைப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, 
பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிட வசதிகளை செய்து தரும் வகையில் சமூக 
நலத் துறையின் மூலம், சென்னையில் இரண்டு இடங்களிலும், கடலூர், திருச்சி, 
புதுக்கோட்டை, மதுரை, தர்மபுரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களிலும்
தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 8 அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் 
சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. பணிபுரியும் பெண்களின் 
எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு 
கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர், 
திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் 
தலா 1 விடுதி வீதம் 11 பணிபுரியும் மகளிர் விடுதிகளும், சென்னையில் 
6 பணிபுரியும் மகளிர் விடுதிகளும், காஞ்சிபுரத்தில் 3 பணிபுரியும் மகளிர் 
விடுதிகளும் ஆக மொத்தம் 20 பணிபுரியும் பெண்களுக்கான அரசு விடுதிகள் 
கட்டப்படும். இதன் மூலம் சுமார் 1,000 பணிபுரியும் பெண்கள் பயன் பெறுவர். 
 ஒரு விடுதி கட்டுமானம் மற்றும் பராமரிப்பிற்கென 1 கோடியே 25 லட்சம் ரூபாய் 
வீதம், 25 கோடி ரூபாய் செலவில் இந்த விடுதிகள் அமைக்கப்படும். 
15. தமிழ்நாட்டில் 4,530 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் 
செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் பொருளாதார 
மேம்பாட்டிற்கு பல்வேறு கடன் உதவிகளை அளித்து வருகின்றன. தற்போது 
குறுகிய காலப் பயிர்க்கடன் அளவு மற்றும் வேளாண் முதலீட்டுக் கடன் அளவு 
அதிகரித்துள்ள நிலையில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் 
கடன் பெறும் உறுப்பினர்கள் கூடுதலாக பங்குத் தொகை செலுத்த வேண்டிய நிலை 
உள்ளது. எனவே, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் உள்ள மகளிர் 
உறுப்பினர்கள் தங்கு தடையின்றி கடன் உதவி பெறும் வகையிலும், 
அவர்கள் கடன் வாங்கும் சக்தியினை அதிகரிக்கும் வகையிலும் 20,000 மகளிர் 
உறுப்பினர்களுக்கு 2,500 ரூபாய் வீதம் பங்குத் தொகை மானியமாக வழங்கப்படும். 
இதற்கென அரசு மானியமாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் மகளிர் 
தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக 50,000 ரூபாய் வரை கடன் பெற 
இயலும். 
பெண்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள், பெண்களின் 
வாழ்வில் ஒரு புதிய மறுமலர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும் 
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்