தமிழகத்தைச் சேர்ந்த 57 யாத்ரீகர்கள் புதுடெல்லியில் இருந்து சென்னை திரும்பினர்

வெள், 06/21/2013 - 12:17 -- Velayutham
உத்தர்கண்ட் மாநிலத்தில் யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 57 பக்தர்கள் தமிழக அரசின் முயற்சியால் பத்திரமாக புதுடெல்லி அழைத்து வரப்பட்டு அங்கிருந்து சென்னை வந்தனர்.
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை
 
உத்தரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத்,பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று,பெருமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக தமிழ் நாடு திரும்ப இயலாமல் சிக்கித்தவித்த, யத்ரிகர்களில்   57 பேரை தமிழக அரசின் முயற்சியின் பேரில் மீட்டு 21-06-13 அன்று  புது தில்லி அழைத்து வரப்பட்டனர்.
புதுடெல்லி தமிழ் நாடு இல்லத்திற்கு அழைத்து வரப்பெற்ற 25 ஆண்கள் மற்றும் 32 பெண்கள் என 57  யத்ரிகர்களை, மீட்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட உயர்மட்டக்   குழுத் தலைவர், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி  எஸ்டி.கே. ஜக்கையன், உறுப்பினர்கள் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் டி.எஸ். ஸ்ரீதர் மற்றும் வருவாய்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் வரவேற்றனர்
 
தமிழ் நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்ட இந்த யாத்ரிகர்கள் அனைவரும் பின்னர்  விமானம் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்