நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட்

செவ், 07/02/2013 - 00:22 -- Velayutham
சென்னை: 
 
நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில்  பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட் ஏவப்பட்டது.
 
"நேவிகேஷன்' செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட்  நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தரைவழி, நீர்வழி மற்றும் வான்வழி பயணங்களுக்கு உதவும் வகையில், முதல்முறையாக, "நேவிகேஷன்' எனப்படும் வழிகாட்டி செயற்கை கோளை வடிவமைத்து  "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1 ஏ' என, பெயரிடப்பட்டு உள்ளது. 
 
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், முதல் ஏவுதளத்திலிருந்து,  இரவு, 11:41 மணிக்கு, இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.  சரியான 12 மணிக்கு தன்னுடைய இலக்கை அடைந்தது,இரவு நேரத்தில், ராக்கெட் விண்ணில் செலுத்துவது, இதுவே முதல் முறை.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்