19 மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அறிவிப்பு

திங், 09/09/2013 - 13:40 -- Velayutham
 
 
 
ஆண்டுதோறும் மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து விவரங்கள் மற்றும் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்கள் குறித்த விவரங்களை பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
 
ஆனால் 2012–13–ல் நிதி ஆண்டுக்கான சொத்துக் கணக்கை மொத்தம் உள்ள 76 மத்திய அமைச்சர்களில் இதுவரை 19 அமைச்சர்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள 56 மத்திய அமைச்சர்கள் நடப்பு ஆண்டுக்கான சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவில்லை. அதேசமயம் பிரதமர் மன்மோகன்சிங்கும் இந்த கணக்கை தாக்கல் செய்யவில்லை. அதன் விபரம் பின் வருமாறு: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.11.96 கோடியில் இருந்து ரூ.12.70 கோடியாக அதிகரித்துள்ளது. இவரது மனைவி நளினி சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.17.79 கோடியில் இருந்து 19.48 கோடியாக உயர்ந்துள்ளது.மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.7.86 கோடியில் இருந்து ரூ.8.75 கோடியாக உயர்ந்துள்ளது. இவரது மனைவி பிரதீபாவின் சொத்து மதிப்பு ரூ.13.46 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி மனைவியின் சொத்து மதிப்பு ரூ.3.08 கோடியில் இருந்து ரூ.3.10 கோடியாக அதிகரித்துள்ளது. வீரப்ப மொய்லிக்கு ரூ.25.55 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி சொத்து மதிப்பில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. மத்திய அமைச்சர் குமாரி செல்ஜாவின் சொத்து மதிப்பு ரூ.19.54 கோடியில் இருந்து ரூ.29.56 கோடியாக உயர்ந்துள்ளது.
 
கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொத்து ரூ.3.13 கோடியில் இருந்து ரூ.4.78 கோடியாக அதிகரித்துள்ளது. இவரது மனைவியின் சொத்து ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக குறைந்துள்ளது.உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேயின் சொத்து மதிப்பு ரூ.7.42 கோடியில் இருந்து ரூ.10.83 கோடியாக அதிகரித்துள்ளது. இருவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.4.53 கோடியில் இருந்து ரூ.5.77 கோடியாக உயர்ந்துள்ளது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்