மாணவர்கள் மீது காவல்துறையினர் அத்துமீறல் பழ நெடுமாறன் கடும் கண்டனம்.

செவ், 01/07/2014 - 00:15 -- Velayutham
 
மாணவர்கள் மீது காவல்துறையினர் அத்துமீறல்
பழ நெடுமாறன் கடும் கண்டனம்.
 
சென்னை ஜன 7
 
காவல்துறையினர் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவருதை பழ நெடுமாறன் கண்டித்துள்ளார்.
 
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 தேதி குடியரசு தலைவர் பிரணாப் வருகையின்போது நள்ளிரவில் திரைப்பட இயக்குனர் கவுதமன் கல்லூரி மாணவர் தமிழினியன் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் நள்ளிரவில்அத்துமீறி கைது செய்து பல இடங்களில் வைத்து கடுமையான முறையில் நடத்தியுள்ளனர்.
மாணவர் தமிழினியன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் ஒருவரை கைது செய்யும்போது எவ்வாறு காவல்துறை நடந்துகொள்ளவேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துதந்துள்ளது.இதில் ஒன்றை கூட தமிழக காவல்துறையினர் பின்பற்றவில்லை.இதுபோன்ற தாக்குதலை நடத்திய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாளை (இன்று 7 ந் தேதி) சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு பல்வேறு மாணவர் அமைப்புகள்,அரசியல் இயக்கங்கள் தமிழ் மைப்புகள் கலந்துகொள்ளும் ஆர்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
தொடந்து இதுபோன்று மாணவர்கள் மீதும் தமிழ் உணர்வாளர்கள் மீது காவல்துறையும் தமிழக அரசும் நடந்துகொண்டால் இதற்க்கான விளைவுகளை வரும் தேர்தலில் சந்திக்கும் என்றார்.
உடன் இயக்குனர் கவுதமன்.ஜோ பிரிட்டோ உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்