உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க நடுநிலையாளர் நியமனம்.ஆளுனர் அவசர சட்டம்.

வியா, 11/20/2014 - 22:45 -- Velayutham
உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க நடுநிலையாளரை
நியமிக்க  ஆளுனர் ரோசைய்யா அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
 
 
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் நடுநிலையாளர்கள் அவசரச் சட்டம் 2014
உடனடியாக அமுலுக்கு வருகிறது என்று
குறிப்பிட்டுள்ளார்.மாநகராட்சி.நகராட்சி.போரூராட்சி( உள்ளாட்சி தவிர)
மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அளவில் விசாரணை அதிகாரி ஒருவரை
அமர்த்துவது.உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள
அதிகாரிகள்,பணியாளர்கள்,மேயர்,துணை மேயர்,தலைவர்கள்.உள்ளிட்ட பிரதநிதிகள்
மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு மேற்காணும் அவசர
சட்டத்தின் மூலம் நடுநிலையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.இந்த
நடுநிலையாளர் முதல்வரின் ஆலோசனையின் பேரில் முதன்மைச் செயலாளர்
அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் நடுநிலையாளராக ஆளுனரால்
நியமிக்கபடுவார்,இவர் மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்.
இந்த நடுநிலையாளர் இடைக்காலத்தில் பதவி விலக நேரிட்டால் அவர் தனது
ராஜினாமா கடிதத்தை ஆளுனரிடம் அளிக்கலாம்,அல்லது கடிதம் மூலமாகவும்
அனுப்பலாம்.
நியமிக்கப்படும் நடுநிலையாளர் மீது முறைகேடு போன்ற குற்றசாட்டுகள்
எழுந்தால் அவரை பணிநீக்கம் செய்வது குறித்து சட்டபேரவையில்  பொரும்பாலான
சட்டமன்ற உறுப்பினர்கள் தீமானம் நிறைவேற்றிய பிறது அதன் அடிப்படையில்
நடுநிலையாளரை ஆனுர் நீக்க உத்தரவிடலாம்.
உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது எழும் ஊழல் புகார்
மற்றும் குற்றசாட்டுகள் குறித்து நடுநிலையர் விசாரணையை
மேற்கொள்ளலாம்.இந்த முறைகேடு கிரிமினல் குற்றமாக இருந்தால் அதனை
சம்பந்தப்பட்ட விசாரணை   அதிகாரி விசாரிக்கலாம்.ஊழியர் மற்றும் அதிகாரி
கடமை தவறும் பட்சத்தில் அவர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  மூலம் துறை
ரீதியான விசாரணைக்கு  பரிந்துரைக்கலாம்.
உள்ளாட்சி அமைப்புக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருந்தால் அதற்க்கு காரணமான
நபரிடம் இருந்து அதனை  திருப்ப வசூலிக்க அவர் உத்தரவிடலாம்.சிவில்
நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் நடுநிலையாளருக்கு உண்டு.சாட்சிகளை சம்மன்
அனுப்பி விசாரிக்கலாம்.சாட்சிகளை அழைக்க உத்தரவிடலாம்.இழப்பை பெறலாம்.
தேவையான ஆவணங்களை பெறலாம்.அரசு அலுவலகங்களில் ஆவணங்களை
பெறலாம்.குற்றச்சாட்டில்  உண்மை இல்லை என்றால் குற்றம்
சாட்டப்பட்டவருக்கு நிவாரண தொகையை வழங்க உத்தரவிடலாம்.இழப்பை
ஏற்படுத்தியவர்கள் அதனை திருப்ப கொடுக்க உத்தரவிடுவது. குறித்த காலத்தில்
அவர் அதனை திருப்ப செலுத்த தவறினால் அந்த தொகையை அவரிடமிருந்து அந்த
தொகையை பெறலாம்.இதுபோன்ற விசாரணைக்கு காவல்துறையின் உதவியை
நாடலாம்.தேவையான அரசு ஊழிர்களை நியமித்துகொள்ளலாம்.உள்ளாட்சிகளில்
முறைகேடு நடைபெற்று 5 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் புகார்களை
 நடுநிலையாளர்கள் விசாரிக்கத்  தேவையில்லை....இவ்வாறு அந்த அவசர
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்