ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்

திங், 01/12/2015 - 19:14 -- Velayutham
 
 
 
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். 
 
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில்  ஜல்லிக்கட்டை நடத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்றும், இதற்காக மத்திய அரசுடன் தமிழக குழு டெல்லி செல்லும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் மத்திய அரசுடன் பேச நேற்று தமிழக கால்நடைத்துறை செயலாளர் விஜயகுமார்.இயக்குநர் ஆபிரகாம்.துணை இயக்குநர் ஆயூப்கான் உள்ளிட்ட அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.
தமிழகத்தின் பாராம்பரிய விளையாட்டின் முக்கித்துவத்தை இந்த பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Undefined

புதிய கருத்தை சேர்

Plain text

  • HTML குறிச்சொற்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
  • இணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.
  • வரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்