hadline.

நீட் தேர்வு: கமல் புதிய டுவிட்

ஞாயி, 08/13/2017 - 17:01 -- Velayutham
நீட் தேர்வு: கமல் புதிய டுவிட்

நீட் தேர்வு: கமல் புதிய டுவிட்

சென்னை, ஆக.13: நீட் தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து காலம் தாழ்த்தாமல் உடனே பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை,அவசர சட்டம் கொண்டு வந்தால் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன், நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம், மாணவர் எதிர்காலம் பற்றியது, தயைகூர்ந்து உடனே பேசுங்கள் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

Undefined

அதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை அடித்து சொல்கிறார் தமிழசை.

சனி, 08/12/2017 - 22:43 -- Velayutham
அதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை அடித்து சொல்கிறார் தமிழசை.

அதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை
அடித்து சொல்கிறார் தமிழசை.
சென்னை ஆக 13.
அதிமுகவை நாங்கள் இயக்க நினைக்கவில்லை என்று தமிழசை தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு
பேட்டி அளித்தார்.
தமிழக அரசியலில் உள்ள குழப்பங்களுக்கு பாஜக எந்தவிதத்திலும் காரணமல்ல.ஏதோ
அதிமுக அணிகள் பாஜக பின்னிருந்து பயமுறுத்திப் பணிய வைக்கிறது என்று
திருநாவுக்கரசர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதில்ல் அர்த்தமே
இல்லை.அவர் பாஜகவிலிருந்து சென்றவர்தான்ள.பாஜக நடைமுறைகள் பற்றி அவரும்
அறிந்த ஒன்றுதான்.தமிழகத்தில் ஆட்சி நிலையான ஆட்சியாக அமைய வேண்டும்
என்பதே பாஜகவின் நோக்கம்.எனவேதான் அதிமுக பிளவு இல்லாமல் ஒன்றுபடவேண்டும்
என்று விரும்புகிறது-.மத்திய,மாநில அரசுகளிடம் இணக்கம் தேவை என்றுதான்
நினைக்கிறோமே தவிர இயக்க நினைக்கவில்லை.இரண்டாக இருப்பவர்கள் இணைந்தால்
இரட்டை இலையும் கிடைக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.திமுக
செயல் தலைவர் ஸ்டாலின் குழப்பிய குட்டையில் மீன்பிடிக்கப்
பார்க்கிறார்.தேவைப்பட்டால் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு
வருவதாகக் சொல்லும்போதே நம்பிக்கையின்மையோடு சொல்கிறார்.தற்போது மாநில
அரசுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இணைக்கமாக
செயல்படுகிறோம்.சென்ற முறை சட்டகிழிப்பு அரசியல் நடத்தி செய்திகளில்
வந்ததுபோல செய்திகளுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு பயன்படும்.நடைமுறை
சாத்தியமில்லை.தமிழகத்திற்க்கு தேசிய தலைவர் அமித் ஷா வருவது அரசியலில்
ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.காங்கிஸ்,திமுக ஆட்சியில்
கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிராக அவர்களே இன்று முரண்பட்டு பேசுவது
ஆச்சரியமாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.

Undefined
Subscribe to RSS - hadline.