தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தனது நடிப்புத் திறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இடம்பிடித்து வெற்றி நடை போடுகிறார். சமீபத்தில் ஹிந்தியில் “ஜவான்” படத்திலும், “ஃபர்ஸி” வெப் சீரிஸிலும், “மெர்ரி கிறிஸ்துமஸ்” திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போதைய நிலவரப்படி, அவர் மீண்டும் ஹீரோ கதாபாத்திரங்களையே தேர்வு செய்ய, கடந்த ஆண்டு “மகாராஜா” படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், ஒரு மக்கள் சந்திப்பில் அவர் பகிர்ந்த தகவல் ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அஜித் – விஜய் சேதுபதி கூட்டணி உருவாகாமல் போனது?
சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், “நீங்கள் அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள்?” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,
“நான் போகும் இடங்களில் எல்லாம் இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது. இதற்கு முன் எனக்குச் சம்பவித்ததெல்லாம் திட்டமிட்டு நடந்ததில்லை, அது இயல்பாகவே நடந்தது. அதுபோல், அஜித்துடனும் ஒரு படம் நடக்கும் என நம்புகிறேன். ஏற்கனவே ஒரு படத்தில் இணைவதாக இருந்தேன், ஆனால் அது நடந்தது இல்லை. அந்தப் படத்தின் பெயர் வேண்டாம்!”
என்று கூறினார்.
எந்த படம் டிராப் ஆனது? ரசிகர்கள் ஆர்வம்!
விஜய் சேதுபதி கூறிய “நடக்காமல் போன படம்” குறித்து ரசிகர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து ஒரு பெரிய திரைப்படம் இயக்க திட்டமிட்டிருந்தார். அந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அந்த ப்ராஜெக்ட் டிராப் செய்யப்பட்டது.
இப்போது விஜய் சேதுபதி கூறிய “நடக்காமல் போன படம்” இதுவேதான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
வில்லன் அல்ல, மீண்டும் ஹீரோ!
தனது “பேட்ட”, “மாஸ்டர்”, “விக்ரம்”, “ஜவான்” படங்களில் வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி, தற்போது மீண்டும் ஹீரோ கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் மிஷ்கின் இயக்கும் “ட்ரெய்ன்” படத்தில் நடித்து வருகிறார். இதற்குமுன், மிஷ்கினின் “பிசாசு 2” படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்தார். ஆனால், அந்த படம் இன்னும் வெளியாவில்லை.
இருந்தாலும், அஜித் – விஜய் சேதுபதி கூட்டணி எப்போது கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இந்த பவர் கூம்போ உறுதியாக உருவாகும் என்ற நம்பிக்கையில், ரசிகர்கள் தற்போது காத்திருக்கிறார்கள்.