குழந்தை பிறப்பை எதிர்நோக்கும் தம்பதிகள், ஆண்களின் விந்தணுவின் ஆரோக்கியம் மற்றும் கருமுட்டையின் தரம் குறித்தும் கவனிக்க வேண்டும். விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது அதன் தரம் பாதிக்கப்பட்டிருந்தாலோ, கருத்தரிக்க சிக்கல் ஏற்படும்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கங்கள், மன அழுத்தம், மற்றும் சில கெட்ட பழக்கவழக்கங்கள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
இது இன்று பெரும்பாலான தம்பதிகள் கருத்தரிப்பில் சிக்கலை சந்திக்க காரணமாக உள்ளது.
தரமற்ற விந்தணுக்களால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
சரி, விந்தணு ஆரோக்கியமற்றது என்பதை எப்படிச் தெரிந்துகொள்வது? முக்கியமான அறிகுறிகள் என்ன? மற்றும் விந்தணு வலிமையடைய என்ன செய்யலாம்? இதைப் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
விந்தணு ஆரோக்கியமற்றதற்கான முக்கிய அறிகுறிகள்
விந்தணு எண்ணிக்கை குறைவு
ஒரு ஆண் விந்தணுவின் மில்லிலிட்டருக்கு 16 மில்லியனுக்கும் குறைவாக இருந்தால், விந்தணு எண்ணிக்கை குறைவாகக் கருதப்படும்.
விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தால், கருத்தரிக்க அதிக சிக்கல் ஏற்படும்.
விந்தணு இயக்கம் குறைவு
விந்தணுக்களின் நீந்தி செல்லும் திறன் குறைந்தால், அது கருமுட்டையை அடைய முடியாமல் கருத்தரிக்க தடையாக இருக்கும்.
இது குறைந்த இயக்கத்துடன் கூடிய விந்தணு (Low Motility) பிரச்சனை என்று அழைக்கப்படுகிறது.
விந்தணு அமைப்பு குறைபாடு
விந்தணுக்கள் வழக்கமான வடிவத்தில் இல்லாமல், தலை, வால் போன்றவை மாற்றமாக இருந்தால், கருத்தரிக்க பாதிப்பை ஏற்படுத்தும்.
விந்தணுவின் டிஎன்ஏ சேதம்
விந்தணுவின் தலைப்பகுதியில் உள்ள டிஎன்ஏ பாதிக்கப்பட்டிருந்தால், கருத்தரிக்க முடிவின்மை அல்லது கருச்சிதைவு ஏற்படும்.
ஆரோக்கியமற்ற விந்தணுக்களை சுட்டிக்காட்டும் உடல்நிலைச் சிக்கல்கள்
1. விதைப்பையில் விரிவடைந்த அல்லது சுருண்ட நரம்புகள் (Varicocele)
விதைப்பையில் வெப்பநிலை அதிகரித்து, விந்தணு உற்பத்தி குறையும்.
இது ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
2. விந்து நிறமாற்றம் மற்றும் துர்நாற்றம்
விந்து வெளிவரும் போது வெள்ளை நிறமின்றி மாறியிருந்தால், அல்லது
துர்நாற்றத்துடன் இருந்தால், புரோஸ்டேட் தொற்று (Prostatitis) ஏற்படிருக்கலாம்.
3. முந்தைய புரோஸ்டேட் பிரச்சனை
புரோஸ்டேட் சுரப்பியில் முந்தைய தொற்று அல்லது சிகிச்சை காரணமாக கருவுறுதல் பாதிக்கப்படலாம்.
4. புற்றுநோய் சிகிச்சை பாதிப்பு
கதிர்வீச்சு (Radiation) மற்றும் கீமோதெரபி (Chemotherapy) விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்.
5. விந்து வெளியேறாமல் இருப்பது
உச்சக்கட்ட இன்பத்தின் போது விந்து வெளியேறாமல், சிறுநீர்ப்பையில் சேரும் நிலை ஏற்படலாம்.
இது கருவுறுதலுக்கு தடையாக இருக்கும்.
6. பாலியல் ஆர்வக் குறைவு மற்றும் விறைப்புத்தன்மை பிரச்சனை
ஆண் ஹார்மோன் குறைவாக இருந்தால்,
விந்தணு உற்பத்தி குறையும், கருவுறுதலும் பாதிக்கப்படும்.
விந்தணு ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம்?
ஆரோக்கியமான உணவுகள் (பச்சை காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகள்)
ஒழுங்கையான உடற்பயிற்சி
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்
மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் மற்றும் யோகம் செய்யலாம்
மருத்துவ ஆலோசனை பெறவும்
உங்கள் உடல்நலம் குறித்து கவனமாக இருங்கள்! உங்கள் கருத்துகளை பகிருங்கள்!