உணவுக் கலப்படம் என்பது இந்தியாவில் தீராத பிரச்சினையாக மாறியுள்ளது. FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) தொடர்ந்து இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதுவும் குழந்தைகள் குடிக்கும் பாலில் கூட சோப்பு, மால்டோடெக்ஸ்ட்ரின், மற்றும் ஸ்டார்ச் போன்ற ஆபத்தான கலப்புகள் சேர்க்கப்படலாம். இவற்றை வீட்டிலேயே எளிய முறையில் கண்டுபிடிக்கலாம். இதோ சில FSSAI பரிந்துரைத்த சோதனை முறைகள்.
பாலில் சோப்பு கலந்திருக்கிறதா? சோதனை செய்யும் எளிய வழி
படிகள்:
5 – 10 மில்லி பாலை இரண்டு தனித்தனியான கிண்ணங்களில் ஊற்றவும்.
இரண்டு பாலையும் நன்றாக குலுக்கவும்.
ஒரு பாலில் மட்டும் குமிழ்கள் உருவாகினால், அதில் சோப்பு கலந்திருக்கும்.
சுத்தமான பால் அப்படியே இருக்கும், அதிக குமிழ்கள் உருவாக்காது.
பாலில் மால்டோடெக்ஸ்ட்ரின் இருக்கிறதா? சோதனை செய்யும் எளிய வழி
படிகள்:
ஒரு கிண்ணத்தில் 5 மில்லி பாலை எடுத்து கொள்ளுங்கள்.
அதில் 2 மில்லி அயோடின் ரியாஜென்ட் சேர்க்கவும்.
நன்றாக கலக்கி, நிறமாற்றம் ஏற்படுகிறதா என்று கவனிக்கவும்.
நிறம் மாறினால், அதில் மால்டோடெக்ஸ்ட்ரின் கலந்திருக்கும், இது பாலின் தூய்மையை பாதிக்கும்.
பாலில் ஸ்டார்ச் (மாவு) கலந்திருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?
படிகள்:
2-3 மில்லி பால் அல்லது பால் பொருட்களை 5 மில்லி தண்ணீருடன் கொதிக்க வைக்கவும்.
(நெய் & வெண்ணெய்க்கு தண்ணீர் சேர்க்க தேவையில்லை).
இது நன்றாக குளிர்ந்த பிறகு, அதில் 2-3 சொட்டு அயோடின் டிஞ்சர் சேர்க்கவும்.
பாலின் நிறம் நீலமாக மாறினால், அதில் மாவு (ஸ்டார்ச்) கலந்துள்ளது.
உணவு பாதுகாப்புக்கு இந்த சோதனைகள் முக்கியம்!
FSSAI பரிந்துரைத்த வழிமுறைகள் என்பதால் இதை வீட்டிலேயே சுலபமாக செய்து பார்க்கலாம்.
பால் தயாரிப்பு நிறுவனத்தினை தேர்வு செய்யும் போது பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்யுங்கள்.
இந்த சோதனைகளை மேற்கொண்டு, உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்குங்கள்.
உணவின் தூய்மை உங்கள் ஆரோக்கியத்தின் அடித்தளம்.