விவாகரத்துக்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டில் மயோசிடிஸ் என்ற அரிதான நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா நீண்ட நேரம் சிரமம் அனுபவித்து, தற்போது குணமடைந்து வருகிறார். இந்த பயணம் அவருக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது, ஆனால் தைரியமாக அதனை எதிர்கொண்டு குணம் அடைந்துள்ளார்.
சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் (Owner of Chennai Super Champs, Unveils Team Jersey Ahead of World Pickleball League) கலந்துகொண்ட சமந்தா, தனது புதிய புகைப்படங்களால் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிய சமந்தாவை பார்த்த ரசிகர்கள் மிகவும் வருந்தியுள்ளனர்.
சமந்தா, தனக்கே ஒரு Pickleball டீமை ஆரம்பித்து, அதற்கு “Chennai Super Champs” என்ற பெயர் வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து, “எவ்வளவு அழகாக இருந்த நடிகை, இப்படி ஆயிட்டாங்களே?” என ரசிகர்கள் வருத்தப்படுவதாகக் கமெண்ட் செய்கிறார்கள்.
இதனிடையே, நெட்டிசன்கள் “சமந்தா விரைவில் குணமடைந்து, பல படங்களில் நடிக்க வேண்டும்!” என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி, அவர் மீண்டும் திரையில் பாராட்டப்படும் நாளை எதிர்பார்க்கின்றனர். இது உண்மையில் நடக்குமா என்பது, காலதாமதத்துடன் தான் தெரியவரும்.