உடுமலையில் பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு

0095.jpg

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை இன்று (ஜனவரி 13) கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி மல்லிகை ரூ. 1500-ல் இருந்து ரூ. 2500 ஆகவும், முல்லை ரூ. 1000-ல் இருந்து ரூ. 2000 ஆகவும், சாதிப்பூ ரூ. 700-ல் இருந்து ரூ. 1500 ஆகவும், சம்பங்கி ரூ. 150-ல் இருந்து ரூ. 300 ஆகவும், கோழிக்கொண்டை ரூ. 70-ல் இருந்து ரூ. 140 ஆகவும், செவ்வந்தி ரூ. 200-ல் இருந்து ரூ. 400 ஆகவும், பட்டன் ரோஜ் ரூ. 300-ல் இருந்து ரூ. 400 ஆகவும், கலர் செவ்வந்தி ரூ. 300-ல் இருந்து ரூ. 400 ஆகவும், 20 எண்ணிக்கை கொண்ட ரோஜ் கட்டு ரூ. 170-ல் இருந்து ரூ. 300 ஆகவும், பன்னீர் ரோஜ் ரூ. 250-ல் இருந்து ரூ. 350 ஆகவும், செண்டுமல்லி ரூ. 60-ல் இருந்து ரூ. 100 ஆகவும் அதிகரித்தது.

பொங்கல் பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு விழா உள்ளதால் பூக்களுக்கான தேவை அதிகரித்து அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. விலை அதிகரித்தாலும் கூட மணக்கும் மல்லிகையை மனம் நோகாமல் வியாபாரிகள் சொன்ன விலைக்கு பொதுமக்களும் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top