You are currently viewing கெட்டிமேளம் – மகேஷின் சர்ப்ரைஸ் அஞ்சலியை திக்குமுக்காட செய்தது!

கெட்டிமேளம் – மகேஷின் சர்ப்ரைஸ் அஞ்சலியை திக்குமுக்காட செய்தது!

0
0

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “கெட்டிமேளம்” மெகா தொடரில் நேற்றைய எபிசோடில் பல திருப்பங்கள் நடந்தன. மகேஷின் சர்ப்ரைசுகள், துளசியின் திடீர் நடவடிக்கைகள், வெற்றியின் பதில் என பரபரப்பாக நகர்ந்த இந்த எபிசோடின் முக்கியக் காட்சிகளை பார்க்கலாம்!


மகேஷின் அஞ்சலிக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்!

மகேஷ், அஞ்சலியை கண்ணைக் கட்டி பிரைவேட் ஜெட்டில் அழைத்துச் சென்று பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கிறான்.

  • “பிரைவேட் ஜெட்டா? இது என் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது!” என்று ஆச்சரியத்தில் மெய் மறக்கிறாள் அஞ்சலி.
  • பிறகு, மகேஷ் அஞ்சலியை கடலுக்கு நடுவே உள்ள கப்பலுக்கு அழைத்துச் சென்று கேக் கட் செய்ய வைத்து பிறந்த நாளை கொண்டாடுகிறான்.
  • அதோடு முடிக்காமல், செயற்கை மழையை ஏற்படுத்தி அஞ்சலியை இன்னும் சந்தோசப்படுத்துகிறான்.

துளசியின் அதிர்ச்சி – தியா அழுகை!

மறுபக்கம், துளசி வீட்டிற்குள் சென்றபோது, தியா கைகளில் காயங்களுடன் பழைய துணிகளை தூக்கி கொண்டு வருவது அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

  • துளசியைப் பார்த்ததும் தியா அவளை கட்டிப்பிடித்து அழ ஆரம்பிக்கிறாள்.
  • இதைப் பார்த்த ஜெகனின் அம்மா, துளசியை வெளியே துரத்த தொடங்குகிறாள்!

வெற்றியின் கேள்வி – துளசியின் பதில்!

வெற்றி, துளசி இன்னும் வரலையே என்று கேட் அருகே சென்று பார்க்கிறான்.

  • வெற்றி “எல்லாம் ஓகேவா?” என கேட்க,
  • துளசி “நன்றி” சொல்லி, “இனிமேல் என் பின்னால் வராதீங்க!” என கட்டுப்பாட்டுடன் பதிலளிக்கிறாள்.

சிவராமனின் கலாய்ப்பு!

மகேஷ், அஞ்சலிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, அடுத்ததாக ஹோட்டலில் அவளுக்குப் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து அசத்துகிறான்.

  • அஞ்சலி அடுத்தடுத்த சர்ப்ரைசில் மெய் சிலிர்த்து நிற்கிறாள்!
  • இதைத் தொடர்ந்து, அஞ்சலியின் அப்பா சிவராமன், மகேஷுடன் அனுப்பிய விவரம் தெரியும்போது,
    “நேற்று பொண்ணு தனியா இருப்பாளோன்னு பயந்துட்டாங்க, இன்னிக்கு மாப்பிளையோட அனுப்பிட்டாங்க!” என கலாய்க்கிறார்!

கவினின் நண்பர்கள் – அம்மாவின் எமோஷனல் உருக்கம்!

  • கவினின் நண்பர்கள் அவனை தேடி வீட்டிற்கு வர,
  • அவர்களுக்கு உண்மையை கவினின் அம்மா சமாளித்து, கவினை நேரடியாகப் பார்க்க அனுப்புகிறாள்.
  • நண்பர்கள், “அஞ்சலி வீட்டிற்கு போய்ப் பேசலாம்” என கூற,
  • “இந்த விஷயத்தில மட்டும் அவனை விட்டுடுங்க! காதலால் எங்க குடும்பத்துல நடந்ததெல்லாம் போதும்! என்று கவினின் அம்மா உருக்கமாக பேசுகிறார்.

இன்றைய எபிசோடில் நடக்கும்து?

  • மகேஷ், இரவு 9 மணி ஆகும் போது அஞ்சலியை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான்.
  • கவின், “யாரையோ ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கட்டும்” என்று நண்பர்களை அனுப்புகிறான்.

அடுத்த எபிசோடில் புதிய திருப்பங்கள் காத்திருக்கின்றன – பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது.

Leave a Reply