கோவை: தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை – 15 நாட்களில் 118 பேர் கைது, ₹2.24 கோடி பறிமுதல்

001.jpg

கோவை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 118 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ₹2 கோடியே 24 லட்சத்து 170 ரொக்கத் தொகை, 4 இருசக்கர வாகனங்கள், மற்றும் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிரடி சோதனை மற்றும் நடவடிக்கை

கடந்த டிசம்பர் 22, 2024 முதல் கோவை முழுவதும் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தியனர். இதன் மூலம், தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு 80 வழக்குகள்
ஆன்லைனில் 3-ஆம் நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக 30 வழக்குகள் என மொத்தம் 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை

கைது செய்யப்பட்ட 118 நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதாக கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனைகள் தமிழக அரசின் சட்டங்களை மீறியவர்களை எதிர்க்கும் விதமாக நடத்தப்பட்டதாகவும், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை முற்றாக ஒழிக்க காவல்துறையின் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top