நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா, தனது அதிரடி நடனத்தால் இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவி வருகின்றார். சமீபத்தில், விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா நடித்த “கீதா கோவிந்தம்” படத்தில் இடம்பெற்ற “இன்கேம் இன்கேம் காவாலே” பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களை கிறங்கடிக்கும் சாயிஷா
தனது அழகான நடனத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சாயிஷா, இதற்கு முன்பு “பத்து தல” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்தார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்காத அவர், தனது நடன ஆர்வத்தை தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
டைட் டி-ஷர்ட்டில் டான்ஸ் – வைரலாகும் வீடியோ
சமீபத்தில், டைட் டி-ஷர்ட்டில் தனது நடன திறனை வெளிப்படுத்திய சாயிஷாவின் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறுகிய நேரத்தில் லட்சக்கணக்கான லைக்குகள், கமெண்ட்கள் குவிந்துள்ளன.”இன்கேம் இன்கேம் காவாலே” பாடலுக்கான நடனத்துடன், சாயிஷா மீண்டும் தனது ஆட்டத்தால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.|
ரசிகர்களின் கோரிக்கை – திரையுலகிற்குத் திரும்பவேண்டும்!
வனமகன், கடைக்குட்டி சிங்கம், காப்பான், ஜுங்கா, கஜினிகாந்த், டெடி போன்ற பல படங்களில் நடித்த சாயிஷா, திரைத்துறையில் மறுபடியும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
“சாயிஷா திரும்பி வரணும்.”
“அவரது நடனத்தை வெறித்தனமாக ரசிக்கிறோம்.”
“சினிமாவுக்கு ரீஎண்ட்ரி கொடுக்கலாமே?”
என்றெல்லாம் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சாயிஷா திரைத்துறைக்கு மீண்டும் வருவாரா? என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.