சென்னை: தமிழ் திரையுலகில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனுக்கு, பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமான், சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
“தன் தனித்துவமான நடிப்பு, நகைச்சுவை நேர்த்தி, உடல்மொழி ஆகியவற்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த திரைக்கலைஞன்,
தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் திரைத்துறையில் வெற்றியைத் தொடந்தவர்,
தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் உச்ச நட்சத்திரம், என் ஆருயிர் இளவல் சிவகார்த்திகேயன்!”
என்று புகழாரம் சூட்டி, அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் படைப்புகளை வழங்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
“அடுத்தடுத்து சாதனை படைப்புகள் வழங்க அண்ணனின் அன்பும் வாழ்த்துகளும்!” என சீமான் பதிவை முடித்துள்ளார்.