சீனாவின் அதிரடி! BYD-யின் வலு… ஜெர்மனி, ஜப்பான் கார்கள் முடிவுக்கட்டுமா?

0332.jpg

பெய்ஜிங்: ஆட்டோமொபைல் உலகில் பெரிய புரட்சியை கிளப்பியிருக்கிறது BYD! 😲
ADAS (Advanced Driver Assistance Systems) தொழில்நுட்பத்தை இலவசமாக வழங்கும் முதல் கார் நிறுவனமாக சீனாவின் BYD அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் சீனா கார்கள் ஆதிக்கம் செலுத்தும் என தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகிறார்கள். ஜெர்மனி, ஜப்பான் கார் மோகத்தின் முடிவு தொடங்கிவிட்டதா?


 ஒரு காலத்தில் Nokia, இப்போது?

நோக்கியா மொபைல்கள் காலம் கடந்தது போல, ஜெர்மனி-ஜப்பான் கார்கள் காலம் கடந்துவிடுமா?
🔹 Samsung ஆதிக்கம் செலுத்தியது… பிறகு Oppo, Vivo, OnePlus வந்தது!
🔹 இப்போது அதேபோல, BYD, Xpeng, Geely Auto போன்ற சீன நிறுவனங்கள் மார்க்கெட்டை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன!


 ADAS – கார்களின் எதிர்காலம்!

ADAS என்றால் கார் ஓட்டுவதை மிக எளிதாக்கும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பம்.
இதில் அடங்கும் முக்கிய அம்சங்கள்:

Automatic Emergency Braking (AEB) – தானாகவே அவசர நிலையில் பிரேக் அடிக்கும்.
Lane Keep Assist (LKA) – கார் சாலையில் இருந்து விலகாமல் இருப்பதை உறுதி செய்யும்.
Adaptive Cruise Control (ACC) – மற்ற வாகனத்துடன் பாதுகாப்பான தூரம் வைத்திருக்கும்.
Blind Spot Monitoring (BSM)பார்வைக்கு தெரியாத இடங்களில் வாகனத்தை அலர்ட் செய்யும்.

இவை இருந்தால், விபத்துகளைத் தவிர்க்கலாம், பார்க்கிங்கை எளிதாக்கலாம்!


 ADAS கார்களின் விலை எவ்வளவு?

இத்தனை நவீன அம்சங்களுடன் கார் வாங்கினால், குறைந்தபட்சம் ரூ. 60 லட்சம் செலவாகும்.
முன்னாள் மன்னன் – Tesla!
🔹 எலான் மஸ்க்கின் டெஸ்லா தான் ADAS கார்களுக்கு சிறந்ததாக இருந்தது.

தற்போதைய புது மன்னன் – BYD!
🔹 BYD-யின் Seagull மாடல் ADAS வசதியுடன் வெறும் ₹8.6 லட்சம்!
🔹 இலவசமாக ADAS வசதி வழங்கும் முதல் நிறுவனம்!
🔹 இதனால் மற்ற நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிகிறது.


 Auto Market அதிர்ச்சி! BYD-யின் தாக்கம்!

BYD-யின் அறிவிப்பு வெளியானவுடன்:
Xpeng பங்கு – 9.2% சரிவு
Geely Auto பங்கு – 11.4% சரிவு
BYD பங்கு – 4.5% உயர்வு

நிபுணர்கள் கூறுவதாவது:
👉 முதலில் சக சீன நிறுவனங்களை தாக்கும் BYD!
👉 பின்னர் ஜெர்மனி, ஜப்பான் நிறுவனங்களையும் ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் பின்னுக்கு தள்ளும்!
👉 இது நடுத்தர குடும்பங்களுக்கு நல்ல செய்தி! இனி, பணக்காரர்களுக்கு மட்டும் இல்லை, எல்லாரும் ஆட்டோ டிரைவ் காரை வாங்கலாம்!


 ஆட்டோமொபைல் உலகின் புதிய மன்னன் BYD?

முன்பு Nokia போன் உச்சத்தில் இருந்தது… ஆனா Android வந்ததும் காலி!
இப்போது ஜெர்மன், ஜப்பான் கார்கள் – வருங்காலம் BYD-யா? 
 மார்க்கெட்டில் மாற்றம் உறுதி… முந்திக்கொள்வது யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top