திருச்சி டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட கருத்துகளைப் பற்றி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
சீமான், டிஐஜி வருண்குமார் குறித்து “ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ்அ” என விமர்சித்த போது, வருண்குமாரின் வழக்கறிஞர் அதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து, “ஐபிஎஸ்ஐ விட பெரிய படிப்பு ஒன்று இருக்கிறதா? சீமான் கல்வி தகுதி என்ன?” என கேள்வி எழுப்பினார்.
திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசி வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் பதிவிட்டதை தொடர்ந்து, வருண்குமார் அவர்கள் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த மனுவின் விசாரணை இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், டிஐஜி வருண்குமார் ஆஜரானார் மற்றும் இரண்டு பேர் சாட்சியம் அளித்தனர். சாட்சிகளை விசாரித்த பின்னர், நீதிபதி பாலாஜி வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் மீண்டும் டிஐஜி வருண்குமார் பற்றி கீழ்த்தரமான முறையில் பேசி உள்ளார். அவருக்கு அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை. ஐபிஎஸ் என்பது ஒரு உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி சீமான் பேசுவதற்கு என்ன கல்வி தகுதி இருக்கிறது?” என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.