நாக சைதன்யா – சாய் பல்லவி நடிப்பில் சந்து மொண்டேட்டி இயக்கிய ‘தண்டேல்’ திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.
பிப்ரவரி 7 அன்று கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்றாலும், படத்தின் உலகளாவிய வரவேற்பு கணிசமான வளர்ச்சியைக் கண்டது.
வசூல் விபரம்:
முதல் நாளில் ₹21 கோடி
இரண்டாவது நாளில் ₹41.2 கோடி
விரைவில் ₹100 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அந்த மைல்கல்லை தாண்டியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாக சைதன்யா – திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் ‘தண்டேல்’ என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
பாடல்கள் மக்களிடையே செல்வாக்கைப் பெற்று பெரும் ஹிட்டாக மாறியுள்ளது.
இந்த வெற்றியால் ‘தண்டேல்’ வெற்றி படமாக அமர்ந்துவிட்டது என்று சொல்லலாம்.