காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) 37வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. மதியம் 2:30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீர் விநியோகத்தை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்தனர்.
இதற்கமைய, கர்நாடக அரசு பிப்ரவரி முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 10 TMC காவிரி நீரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பால் தமிழகத்தின் விவசாயிகள் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு முக்கிய ஆதராவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.