மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்துவருகிறார். தென்னிந்திய திரையுலகிலும் அவரை அறிமுகம் செய்ய முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், அவர் தமிழில் நடிக்க உள்ளதாக உறுதியாகியுள்ளது.
தேவரா படத்தின் வெற்றியை தொடர்ந்து…
ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்த தேவரா படம் கடந்த ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ஜான்வியின் நடிப்பு மற்றும் பாடல் காட்சிகளில் அவரது நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதையடுத்து, தென்னிந்திய திரை உலகில் அவர் தொடர்ந்து வாய்ப்புகள் பெறத் தொடங்கினார்.
தமிழ் திரையுலகில் முதல் படம்!
தற்போது ஜான்வி, இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், சற்குணம் இயக்கும் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெட்பிளிக்ஸ் மூலம் வெளியாகவுள்ள இந்த பான் இந்தியா வெப் தொடர், தமிழ் திரையுலகில் ஜான்வியின் டெப்யூ ஆகும். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு வெளியீடு குறிக்கோளாக உள்ளது.
ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பிரபலமானவர். அவரது மகள் ஜான்வி, பாலிவுட்டில் பரபரப்பாக நடித்து வரும் நிலையில், தமிழிலும் அவர் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.