திமுகவில் முக்கிய பொறுப்பைப் பெற்ற சத்யராஜ் மகள் திவ்யா – எப்படி இந்த பதவி கிடைத்தது?

0012.jpg

நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா கடந்த மாதம் திமுகவில் இணைந்தார். அவருக்கு எந்த பதவி வழங்குவது என்பது தொடர்பாக கட்சியில் விவாதம் நடந்துகொண்டிருந்த நிலையில், தற்போது திமுகவின் ஐ.டி.விங் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திவ்யாவின் திமுக இணைப்பு – பின்னணி

முதலில், திவ்யாவிற்கு மாவட்ட அல்லது மாநில அளவில் பதவி வழங்க வேண்டுமா? என்பதில் கட்சி தலைமையிடத்தில் ஆலோசனை நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபுவின் முயற்சியால் திவ்யா திமுகவில் இணைந்ததாக தகவல்.

அவருக்கு இளைஞரணியில் (உதயநிதி தலைமையிலான) முக்கிய பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உதயநிதி இதற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவருக்கு உடனடியாக எந்த பதவியும் வழங்கப்படவில்லை.

தொடர்ந்து செகர்பாபு, முதல்வர் ஸ்டாலினிடம் திவ்யாவிற்கு மாநில அளவிலான பொறுப்பு கொடுக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். இதற்கு முதல்வரும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, திவ்யாவை திமுகவின் ஐ.டி.விங் மாநில துணைச் செயலாளராக நியமிக்க கட்சி முடிவு செய்தது.

திவ்யா சத்யராஜ் யார்?

  • உணவியல் நிபுணர் மற்றும் சமூக ஆர்வலர்.
  • “மகிழ்மதி இயக்கம்” என்ற சமூக நல அமைப்பை நிறுவியவர்.
  • அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் (TAPF) நல்லெண்ண தூதராக பணியாற்றி வருகிறார் – பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
  • மருத்துவ துறையின் முறைகேடுகள், நீட் தேர்வுகள் போன்ற சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தவர்.
  • வீகன் உணவுப் பழக்கத்தை (2016 முதல்) பின்பற்றி வருகிறார்.

திவ்யாவின் புதிய பொறுப்பு

திமுகவின் டிஜிட்டல் பரப்புரையில் முக்கிய பங்காற்ற இருக்கும் திவ்யா, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சரின் வாழ்த்துகளைப் பெற உள்ளார். திமுக குடும்பத்திற்கு புதிய பாரம்பரிய அரசியல் வாரிசாக திவ்யா வரவிருப்பதா? என்பது பற்றியும் எதிர்காலத்தில் மேலும் விவாதங்கள் தொடரலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *