சினிமா மற்றும் நடன உலகில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள நடிகை ஷோபனா, தனது திருமணம் குறித்தாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஏன் திருமணம் வேண்டாம்?
சிறுவயதில் இருந்து சினிமாவில் பிரவேசித்த ஷோபனா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அதற்கப்புறம், முழுமையாக தனது பரத நாட்டியக் கல்விக்கே கவனம் செலுத்தி, பலருக்கும் இலவசமாக நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
தற்போது 54 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் குறித்து, “திருமணம் செய்யும் எண்ணமே எனக்கு இல்லை. திருமணத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை. இப்படியே வாழ்வதே எனக்கு சந்தோஷம்,” என்று தெரிவித்துள்ளார்.
பத்மபூஷண் விருது பெற்ற பெருமை!
2006ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமிடம் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற ஷோபனா, சமீபத்தில் மத்திய அரசின் பத்மபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டது.
கலை, நடிப்பு, மற்றும் சமூகப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஷோபனாவின் இந்த முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.