சென்னை: தைப்பூசத் திருநாளில் தமிழ் கடவுள் முருகனை போற்றுவோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் பதிவிட்டதாவது:
“தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!”
தைப்பூசம் முருகன் பக்தர்களுக்குள் மிகப்பெரிய ஆன்மிக உற்சாகத்தை ஏற்படுத்தும் பண்டிகையாகும். இந்த நாளில், முருகனை வழிபட்டு, இறையருளைப் பெறுவோம் என விஜய் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.