தைப்பூசம் & வார இறுதி: ஊருக்கு போகிறீர்களா? – சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

0282.jpg

தைப்பூசம், வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

07, 08, 09 பிப்ரவரி 2025 (வெள்., சனி, ஞாயிறு)
தமிழகம் முழுவதும் கூடுதல் பயணிகள் புறப்படும் என்பதால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.


 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இடங்கள்

சென்னை – கிளாம்பாக்கம் முதல்:

  • திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர்.
  • 07/02/2025 – 380 பேருந்துகள் 🚌
  • 08/02/2025 – 530 பேருந்துகள் 🚌

சென்னை – கோயம்பேடு முதல்:

  • திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர்.
  • 07/02/2025 – 60 பேருந்துகள்
  • 08/02/2025 – 60 பேருந்துகள்

மாதவரம் பேருந்து நிலையம் முதல்:

  • 07/02/2025 – 20 பேருந்துகள்
  • 08/02/2025 – 20 பேருந்துகள்

பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் முதல்:

  • மற்ற பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

திரும்பும் பயணத்திற்கும் சிறப்பு பேருந்துகள்!

ஞாயிறு (09/02/2025) அன்று சொந்த ஊரிலிருந்து சென்னை, பெங்களூர் திரும்பும் பயணிகளுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

முன்பதிவு எண்ணிக்கை:

  • வெள்ளி (07/02): 11,336 பயணிகள்
  • சனி (08/02): 634 பயணிகள்
  • ஞாயிறு (09/02): 8,864 பயணிகள்
  • மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் முன்பதிவு அவசியம்!

 முன்பதிவு எப்படி செய்யலாம்?

பயண நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்யலாம்.

பேருந்து நிலையங்களில் கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் – பயணிகள் எந்த விதமான அசௌகரியமும் இல்லாமல் பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று திரும்ப மிஸ் பண்ணாதீங்க – உடனே முன்பதிவு செய்யுங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top