“நான்தான்மா விஜய்!” – கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் ஆறுதல்

037.jpg

சென்னை:
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து 10 நாட்கள் கடந்த நிலையில், அந்த குடும்பங்களுடன் தவெக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கமாக மிகுந்த தனிமையாக செயல்படும் விஜய், இந்த முறை நேரடியாக 20 குடும்பங்களுடன் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க சென்ற தவெக நிர்வாகிகளின் மொபைல் மூலம் விஜய் நேரடியாக இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது விஜய் கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தைகள்:

“உங்களது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம். விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்.”மேலும், இந்த உரையாடல்கள் எதுவும் படமாகவோ வீடியோவாகவோ பதிவு செய்யக் கூடாது என விஜய் கடுமையாக அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், நிர்வாகிகளும் அந்த உரையாடல்கள் குறித்து யாரிடமும் பகிர வேண்டாம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது, ஓரிரு நாளில் மீதமுள்ள குடும்பங்களுடனும் விஜய் வீடியோ கால் மூலம் பேச முடிவெடுத்துள்ளார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *