நீலகிரியில் முதல் பெண் நடத்துநராக கோத்தகிரி சேர்ந்த சுகன்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, சுகன்யாவின் கணவர் கருப்பசாமி இதே பதவியில் பணியாற்றி வந்தார். ஆனால், 2023ஆம் ஆண்டு பணியிலிருந்தபோதே அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என சுகன்யா கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு நடத்துநர் பணி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது நீலகிரியில் முதன்முறையாக ஒரு பெண் நடத்துநராக நியமிக்கப்பட்ட முக்கியமான சம்பவமாக பார்க்கப்படுகிறது.