பிப்ரவரி 1ம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படும் என்று ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
முந்தைய கட்டண உயர்வுகள் தன்னிச்சையாக நிர்ணயிக்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்த நிலையில், ஆட்டோ சங்கங்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கின்றன.
“போக்குவரத்து துறை அமைச்சர் ஆட்டோ சங்கங்களை அழைத்து பேசி, உத்தியோகபூர்வமாக கட்டண உயர்வை அறிவிக்க வேண்டும். அந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாங்கள் திட்டமிட்டபடி பிப்.1 முதல் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவோம்” என சங்கத்தினர் முடிவுசெய்துள்ளனர்.