சில்லு சில்லாய் போகுதா சிவாஜி குடும்பம்? விக்ரம் பிரபு எடுத்த முடிவு.. மனமிறங்கும் பிரபு.. இது நிஜமா
அன்னை இல்லம் சொத்து பறிமுதல் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கடனை அடைத்துவிட்டு, அந்த தொகையை சகோதரனிடம் பெற்றுக்கொள்ளும்படி யோசனை தெரிவித்தார்.
அதற்கு நடிகர் பிரபு, “அன்னை இல்லம் மட்டுமின்றி, என் அண்ணன் ராம்குமார் பல இடங்களில் கடன் பெற்றுள்ளார். அவர் யாருக்கெல்லாம் பணம் தர வேண்டும் என்று எனக்குத் தெரியாது.அவர் வாங்கிய கடன்களுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?” என்று பதிலளித்தார்.
சகோதரர்களுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும், தந்தையின் காலத்தைப் போலவே ஒற்றுமையாக இருக்கவும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
மூன்று கோடி ரூபாய் கடனை அடைக்க இரு சகோதரர்களும் தலா ஒன்றரை கோடி ரூபாய் பங்களிக்குமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அண்ணனுக்கு உதவ பிரபுவின் மனம் மாறியுள்ளதாகத் தெரிகிறது.
விக்ரம் பிரபு இந்த விஷயத்தில் உடன்படவில்லை என்பது போல் தெரிகிறது. எவ்வளவு காலம்தான் அவர்களுக்கு உதவி செய்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பணம் தர வேண்டாம் என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது.
இருப்பினும், தன் அண்ணனை கைவிட முடியாது என்று பிரபு உறுதியாகக் கூறிவிட்டாராம். “சொத்துப் பிரச்சனை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சொத்துக்களிலிருந்து நான் அவர்களுக்கு எதுவும் தரவில்லை.
என் சொந்த வருமானத்திலிருந்து மட்டுமே கொடுக்கிறேன்” என்று பிரபு தன் மகனுக்கு விளக்கமளித்துள்ளார். இதனால் கோபமடைந்த விக்ரம் பிரபு, அடையாறில் தனியாக வசிக்கச் சென்றுவிட்டார். இவ்வாறு சொத்து விவகாரம் அடுத்த தலைமுறை வரைக்கும் பிரச்சனையாக வெடித்துள்ளது.
Summary:
The Annai Illam property case has widened the existing cracks within the Shivaji Ganesan family. Actor Prabhu is inclined to support his financially burdened elder brother Ramkumar, but his son, Vikram Prabhu, vehemently opposes further aid, leading to significant familial discord and Vikram Prabhu’s decision to live separately. This disagreement underscores the deep-seated tensions surrounding the inheritance and financial responsibilities within the prominent cinematic lineage.









