புதிதாக கட்டப்படும் கட்டிடங்களைச் சுற்றி பச்சை நிற வலை போர்த்துவது ஏன் என்பதைப் பற்றிய தகவல்களை பார்க்கலாம். இந்த நடைமுறை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வேலை செயல்திறனை மேம்படுத்த பல வகையில் உதவுகிறது.
பணியாளர்கள் பாதுகாப்பு
விபத்துகள் தவிர்க்க: கட்டிடத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உயரத்தில் இருந்து தவறி விழும் அபாயம் குறைவடையும்.
கவனக்குறைவைக் குறைக்க: வெளியில் நடப்பவற்றைப் பார்க்கும்போது கவனம் சிதறுதல் ஏற்பட்டு, வேலைச் செய்யும் போது பாதிப்பு ஏற்படலாம்.
சூழல் பாதுகாப்பு
தூசி மற்றும் கற்கள் வெளியில் செல்லாமல் தடுக்கும்: கட்டிடப் பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து தூசிகள் பறக்காமல், அருகிலுள்ள கட்டிடங்களை மாசுபடுத்தாமல் பாதுகாக்க உதவுகிறது.
சிமென்ட், பெயிண்ட் சிதறலைத் தடுக்கும்: கட்டிடத்தின் வெளிப்புற வேலைகளின் போது சிமென்ட் கலவை அல்லது பெயிண்ட் அருகிலுள்ள கட்டிடங்களில் படாமல் இருக்க இந்த வலை பயன்படுகிறது.
வேலை செயல்திறனை அதிகரிக்கும்
வெயிலின் தாக்கம் குறையும்: அதிகமான சூரிய ஒளி நேரடியாக வராமல் பாதுகாக்க, தொழிலாளர்கள் உடனே சோர்வடையாமல் வேலை செய்ய இது உதவுகிறது.வேலை தாமதம் குறையும்: வெளியில் நடப்பதை கவனிக்க நேர்ந்தால் வேலை செய்யும் வேகத்திலும் குறைவு ஏற்படலாம், இதை தவிர்க்கும் வகையில் வலை அமைக்கப்படுகிறது.
மக்கள் பாதுகாப்பு
வழிப்போக்கர்கள் காயமடைவதைத் தடுக்கும்: கட்டிட வேலைகளின் போது, கட்டிடம் மேல் இருந்து சிறு கற்கள், குப்பைகள் தெருவில் நடந்து செல்லும் மக்களுக்கு பாயாமல் பாதுகாக்க இந்த வலை பயன்படுகிறது.
கட்டிடத்தின் மீது திருஷ்டி படாமல் இருக்க?
கண்கள் விழாமல் இருக்க பச்சை வலை? சிலர் இதை திருஷ்டி (கண்ணேறு) நம்பிக்கையின் அடிப்படையிலும் பயன்படுத்துகிறார்கள். கட்டிடம் முழுமையாக முடியும் வரை அதன் மீது பிறரின் எதிர்மறை பார்வை இருக்காமல் இருக்க இந்த வலை போர்த்துவதாகவும் சிலர் கருதுகின்றனர்.
பச்சை நிற வலை கட்டட வேலைகளில் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்ய முக்கிய பங்காற்றுகிறது. இது விபத்துக்களைத் தவிர்த்து, தூசி மற்றும் மாசுகளை கட்டுப்படுத்தும், வேலை நேரம் வீணாகாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.