போனஸ் வழங்கும் புதிய முறை – சீன நிறுவனத்தின் அதிரடி பரிசு!

0258.jpg

பீஜிங்: பணியாளர்களுக்கு வருஷாந்திர போனஸ் வழங்கும் விதத்தில், ஹெநான் மைன் கிரேன் நிறுவனம் (Henan Mine Crane Co. Ltd) புதிய முயற்சியொன்றை மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மில்லியன் யுவான்கள் மேசையில் – ஊழியர்கள் போட்டி!
ஜனவரி 25ஆம் தேதி, நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில், போனஸ் வழங்கும் விதம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. 70 மீட்டர் நீளமான மேசையில் 40 மில்லியன் யுவான் (47 கோடி ரூபாய்) பரப்பப்பட்டு, ஊழியர்களுக்கு ஒரு சவால் விடுக்கப்பட்டது – “15 நிமிடங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்!”. ஆனால், தவறாக எண்ணினால், அந்த தொகை போனஸிலிருந்து கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதிரடியாக உயர்ந்த போனஸ்!
ஊழியர்கள் ஆர்வத்துடன் போட்டியிட்டு பணத்தை எடுத்து கொண்டார்கள். ஒருவர் 100,000 யுவான் (11 லட்சம் ரூபாய்) சரியாக எண்ணியதை காண, நிறுவன உரிமையாளர் போனஸ் தொகையை 60 மில்லியன் யுவானுக்கு உயர்த்தினார். இந்திய மதிப்பில் இது 71 கோடி ரூபாய் ஆகும்.

சோஷியல் மீடியாவில் வைரல்!
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, ‘mothershipsg’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். பலர் வசீகரமாகவும், சிலர் விமர்சனமாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • ஒரு நெட்டிசன், “எங்கள் நிறுவனத்திலும் இதே போன்று போனஸ் வழங்குவார்கள், ஆனால் பணத்திற்கு பதிலாக வேலை கொடுப்பார்கள்!” என கலாய்த்துள்ளார்.
  • இன்னொருவர், “நேராக பணியாளர்களின் கணக்கில் பணத்தை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பணத்தை அள்ளுவதற்காக போட்டி நடத்துவது அவமானகரமானது!” என விமர்சித்துள்ளார்.

சீனாவின் வித்தியாசமான உலகம்!
இந்த போனஸ் வழங்கும் புதிய முறை, உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் வைரல் சம்பவமாக மாறியுள்ளது. பணத்தை அள்ளி சென்ற ஊழியர்கள், அதைப் பார்த்து ஆச்சரியமானோர் – எல்லோரும் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *