திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே புதிய நான்கு வழிச்சாலையில், வேடப்பட்டி பிரிவில் இன்று (ஜனவரி 13) விபத்து ஏற்பட்டது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் ஒருவழிப் பாதையில் இருசக்கர வாகனத்தில் அலட்சியமாக சென்றதால், போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை திருப்ப முற்பட்டார்.

அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் நிலை தடுமாறி, அதிகாரி பயன்படுத்திய வாகனத்தின் மீது மோதி விபத்தில் சிக்கினர். காயம் அடைந்த இளைஞர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







