சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு அடிக்கடி ஒரே மாதிரியான சைடிஷ் செய்து சலிப்பாகிவிட்டதா?
சிக்கன், மட்டன் இல்லாமல் கூட அசைவ சுவை தரும் ஒரு சூப்பரான கிரேவி செய்யலாமா?
அதுவும் மீல் மேக்கரை வைத்து! இதோ… மட்டன் குருமா மாதிரி செம சுவையில் இருக்கும் மீல் மேக்கர் குருமா.
தேவையான பொருட்கள்
🔹 மீல் மேக்கர் – 150 கிராம்
🔹 பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
🔹 மல்லித்தூள் – 3 ஸ்பூன்
🔹 மிளகாய்த்தூள் – 1.5 ஸ்பூன்
🔹 மஞ்சள்தூள் – ½ ஸ்பூன்
🔹 நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
🔹 தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
🔹 முந்திரிப்பருப்பு – 6
🔹 உப்பு – தேவைக்கேற்ப
🔹 இஞ்சி – 1 துண்டு
🔹 பூண்டு – 10 பல்
🔹 பட்டை – 2 துண்டு
🔹 கல்பாசி – 1 ஸ்பூன்
🔹 கிராம்பு – 4
🔹 சோம்பு – 1 ஸ்பூன்
தாளிக்க:
✔ பட்டை, சோம்பு, கறிவேப்பிலை – சிறிதளவு
வறுத்து அரைக்க:
✔ சின்ன வெங்காயம் – 15
✔ மிளகு – 1 ஸ்பூன்
✔ சீரகம் – 1 ஸ்பூன்
✔ தக்காளி – 2
எளிய செய்முறை
1️⃣ மீல் மேக்கரை சுடுநீரில் சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி இரண்டு முறை பச்சை தண்ணீரில் கழுவி நன்கு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.
2️⃣ ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி, ஆறியதும் தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
3️⃣ இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, கிராம்பு, கல்பாசி – இதை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
4️⃣ குக்கரில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
5️⃣ அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
6️⃣ மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தக்காளி சேர்த்து மெலிதாக மாறும் வரை வதக்கவும்.
7️⃣ மீல் மேக்கர் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, அரைத்த மசாலா விழுது, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
8️⃣ குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் இறக்கி, மல்லி இலை தூவி கலந்து விடவும்.
சூப்பரான சுவை! எதோட சேர்த்தாலும் செம!
✔ சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை – எதோட சேர்த்தாலும் பரவாயில்லையே!
✔ சாதத்துடனும் சூப்பரா இருக்கும்!
✔ மட்டன் குருமா போல நச்சுனு இருக்கும்!