மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப்பிற்கு வானவில் அதிசயம் – பரவசத்தில் கிறிஸ்தவர்கள்!

0017.jpg

ரோம்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிமோனியா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ரோமின் ஜெமெல்லி பாலிகிளினிக்கில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்.இந்த நிலையில், அவர் அனுமதிக்கப்பட்ட அறையின் மேல் வானவில் தோன்றியதால், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களிடையே பரவசம் ஏற்பட்டுள்ளது. இது, இறைவன் அருள் கடைத்ததற்கான அறிகுறி என்றும், போப் விரைவில் குணமடையப்போகிறார் என்றும் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

போப்பின் உடல்நிலை – மருத்துவமனை அறிக்கை

சமீப நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப்பிற்கு, மருத்துவர்கள் முழுமையான சிகிச்சை அளித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக வாட்டிகனில் சிகிச்சை பெற்றுவந்த போப், சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், “போப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும், அவர் நல்ல மனநிலையில் உள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மூச்சுக்குழாய் அழற்சிக்கான சிகிச்சைகள் தொடரும் நிலையில், அவர் விரைவில் மீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வானவில் அதிசயம் – நம்பிக்கையில் கிறிஸ்தவர்கள்

போப்பின் அறையின் மேல் வானவில் தோன்றிய காட்சி, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது, “இறைவன் போப்பின் நலத்திற்காக அருள் புரிகிறார்” என்ற செய்தியை ஏற்படுத்தியுள்ளது.சமூக வலைதளங்களில் இந்த வானவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன. “போப் மீண்டும் நலம்பெற்று திரும்புவார், இதுவே அதன் அறிகுறி” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை – மீண்டு வர போப்

நோயின் தாக்கம் காரணமாக, அவருடைய நுரையீரல் செயல்பாடு குறைந்திருப்பதால், இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படக்கூடும் என மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், போப் விரைவில் முழுமையாக குணமடைந்து திரும்ப வேண்டும் என்று கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் இணைந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top