முட்டை ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு முக்கிய அங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பலரும் முட்டையை வேகவைத்து சாப்பிடுவது பழக்கமாக கொண்டுள்ளார்கள். ஆனால், முட்டை வேகவைத்த தண்ணீரை எறியாமல் பயன்படுத்தலாம்னு தெரியுமா?
இந்த நீரில் கூட பல ஊட்டச்சத்துக்கள் இருக்கு, இது தாவர வளர்ச்சி, முடி பராமரிப்பு, வீடு சுத்தம் செய்வதற்கும் பயன்படுகிறது. இந்த முட்டை நீரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கீழே பாருங்க.
1. தாவரங்களுக்கு சிறந்த உரம்
முட்டை வேகவைக்கும் நீரில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இந்த தண்ணீரை குளிர வைத்து, தாவரங்களுக்கு பாசனம் செய்யலாம்.
மண்ணின் தரம் மேம்பட்டு, தாவர வளர்ச்சி, வேர்களின் வலிமை அதிகரிக்கும்.
மெக்னீசியம் குளோரோபில் உற்பத்தியை தூண்டி, தாவரங்களை பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும்.
2. தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்
முட்டை நீரிலிருக்கும் தாதுக்கள் முடி நுண்குழாய்களை வலுப்படுத்தும்.
பொடுகைக் குறைத்து, முடிக்கு இயற்கை பளபளப்பை தரும்.
தலைக்குக் குளித்த பிறகு இறுதியாக இந்த நீரை முடியில் ஊற்றவும், இதனால் முடி வறட்சி குறையும்.
3. வீடு சுத்தம் செய்ய பயன்படும்
முட்டை நீரின் இயற்கை கார தன்மை, கிரீஸ், அழுக்கு, எண்ணெய் படிந்த பளிங்கு மேற்பரப்புகளை சுத்தம் செய்ய உதவும்.
சமையலறை மேற்பரப்புகள், அடுப்பு, தொட்டிகள் போன்றவற்றை இந்த நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
இயற்கை கிளீனிங் ஏஜென்ட் மாதிரி இதை பயன்படுத்தலாம்!
4. சிறப்பான தோல் பராமரிப்பு
முட்டை நீரிலிருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம், சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும்.
குளிக்கும் நீருக்கு சிறிதளவு முட்டை வேகவைத்த நீரை சேர்த்தால், சருமத்திற்கு ஒரு நல்ல ஹைட்ரேஷன் கிடைக்கும்.
முடிவாக…
முட்டை வேகவைத்த நீரை வீணாக்காதீங்க. இதை உங்கள் தாவரங்களுக்கும், முடிக்கும், வீட்டு சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இயற்கையான, பயனுள்ள இந்த வழியை உடனே பயன்படுத்திப் பாருங்க.