சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள கன்னிகாபுரம் பகுதிக்கு ஆய்வுக்காக வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுடன், இளைஞர்கள் செல்ஃபி, புகைப்படங்கள் எடுத்து உற்சாகப்பட்டனர்.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள், மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகள் தொடர்பாக அவர் அடிக்கல் நாட்டினார்.