You are currently viewing ராகுல் காந்திக்கு புதிய பிரச்சனை – அரசுக்கு எதிராக பேசியதாக வழக்குப்பதிவு.

ராகுல் காந்திக்கு புதிய பிரச்சனை – அரசுக்கு எதிராக பேசியதாக வழக்குப்பதிவு.

0
0

புவனேஸ்வர்: “இந்திய அரசுக்கும் எதிராக போராடுகிறோம்” என்ற ராகுல் காந்தியின் பேச்சு பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ஒடிசா போலீசார் அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 என்ன நடந்தது?

லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தி, BJP, RSS ஆகியவற்றை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
 கடந்த 15ம் தேதி, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
 இதில் சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 அந்த நிகழ்வில் ராகுல் காந்தி பேசுகையில்,
“நாம் (காங்கிரஸ்) BJP, RSS மட்டுமின்றி, இந்திய அரசுக்கு எதிராகவும் போராடுகிறோம்” என்றார்.


 சர்ச்சையை கிளப்பிய ராகுலின் பேச்சு!

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு BJP கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.
“இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம்” என்பது உள்நோக்கத்துடன் கூறப்பட்டது என காங்கிரசை குற்றம் சாட்டினர்.
 இதை கண்டித்து ராமா ஹரி புஜாரி என்ற ஒருவர் ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா போலீசில் புகார் செய்தார்.


 ராகுல் மீது இரு பிரிவுகளில் வழக்கு!

புகாரின் அடிப்படையில், ஒடிசா போலீசார்
பிஎன்எஸ் சட்டப்பிரிவு 152 – (இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு எதிராக பேசுதல்)

பிஎன்எஸ் சட்டப்பிரிவு 197 (1) (d) – (தவறான கருத்துகள் மூலம் இந்திய ஒற்றுமைக்கு மிரட்டல் விடுத்தல்)

 இந்த வழக்குப்பதிவு ராகுலுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது!


 இதற்கு முன்பும் வழக்குப் பதிவு!

ராகுல் காந்தி மீது இதே பேச்சுக்காக அசாம் போலீசும் வழக்குப் பதிவு செய்திருந்தது.
 இப்போது ஒடிசா போலீசும் நடவடிக்கை எடுத்துள்ளது.

 இது ராகுல் காந்திக்கு எப்படி தீர்வு கிடைக்கும் என்பது காலத்தால் தெரியவரும்.

Leave a Reply