சீமானின் வன்னிப் பயணம் நீண்ட காலமாகவே பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. அத்துடன், அவர் வன்னியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களும் மர்மமாகவே இருந்து வந்தன.
முதலில், சீமான் வன்னிக்கு அழைக்கப்பட்டதற்கான காரணம் “எல்லாளன்” திரைப்படத்தை இயக்குவதற்காக என்றே கூறப்பட்டது. ஆனால், பல மாதங்கள் கடந்தும் அந்த திரைப்படத்தின் பணிகளில் சீமான் நேரடியாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அவர் அந்தப் படத்தின் தொடக்க நாளில் மட்டுமே செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் உண்மையில் என்ன காரணம் இருக்கலாம்? சீமானை விடுதலைப் புலிகள் ஏன் வன்னிக்கு அழைத்தார்கள்?
இந்த கேள்விகளுக்கான விடையைக் கண்டுபிடிக்கும் முயற்சியாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை முக்கியஸ்தரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.