தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து, தற்போது கதாநாயகனாக வலம் வரும் சூரி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெண்ணிலா கபடி குழுவில் இருந்து கதாநாயகன் வரை
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சூரி, திரையுலகில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் அவர் காட்டிய நடிப்பு, அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர், விஜய், அஜித், ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக முத்திரை பதித்தார்.
தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். அந்த படம் சூப்பர் ஹிட்டாக, அவரை திறமைசாலி நடிகராக நிலைப்படுத்தியது. அதன்பின் கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 ஆகிய படங்களில் நடித்தார்.
வாழ்க்கை கொடுத்த இயக்குநருக்கு ‘நோ’ சொல்லியிருப்பாரா?
இந்நிலையில், வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் சூரியை காமெடி நடிகராக உயர்த்திய இயக்குநர் சுசீந்திரன், அவரை மீண்டும் இயக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சூரி “தயாரிப்பாளர்கள் உங்களை இயக்குநராக ஏற்க மறுக்கிறார்கள்” என சொல்லி, அவருடன் மீண்டும் இணைவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
இதைக் கேட்ட ரசிகர்கள் “சூரி நினைத்தால் இப்படத்தை தானே தயாரிக்கலாம்! அல்லது, அவரின் நண்பர் சிவகார்த்திகேயனின் பேனரில் படம் செய்யலாம், ஆனால் ஏன் மறுக்கிறார்?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், கோலிவுட்டில் இது புதிய விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் காரணமாகியுள்ளது.