புதுச்சேரி: வில்லியனூர் கோட்டைமேடு பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கண் உத்தரவின்பேரில், வில்லியனூர் தெற்கு வருவாய் துணை மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வில்லியனூர் வட்டாட்சியர் சேகர் தலைமையில், பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் விஜயலட்சுமி மற்றும் உதவி பொறியாளர் கோபி முன்னிலையில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சாலையோர விளம்பர பலகைகள், அரசு இடத்தில் அமைக்கப்பட்ட மதில்கள், கடைகளின் மேற்கூரைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையில் கிராம நிர்வாக அலுவலர் குணா செந்தில் குமார், வருவாய் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.