திம்பு: இந்தியாவில் பெட்ரோல் விலை ₹100ஐ கடந்துவிட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் ₹64க்கு கிடைக்கிறது என்று ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்களில் என்றால், நம்ப முடியுமா? ஆனால் இதற்குப் பின்னால் ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கிறது.
இந்தியாவில் பெட்ரோல் விலை எப்படி?
- தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100.80
- டீசல் ₹92.39
- மாநிலங்கள், வரி கட்டணங்களின் அடிப்படையில் பெட்ரோல் விலை மாறுபடுகிறது.
- பெரும்பாலான இடங்களில் பெட்ரோல் ₹100க்கு மேல் தான் விற்கப்படுகிறது.
ஆனால் ஒரே இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் ₹64க்கு பெட்ரோல் விற்றால் எப்படி?
ட்விஸ்ட் – பூடானில் பெட்ரோல் விலை குறைவு!
சமீபத்தில் முகமது அர்பாஸ் கான் என்ற நபர் பூடானுக்குச் சென்றார். அங்கு,
- பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்புகள் இருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தார்.
- மேலும், ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் ₹64 என விற்பதை காண திக்குமுக்காடினார்.
அவர் பகிர்ந்த வீடியோ வைரலாக, பலரும் “இந்தியாவிலும் இதே விலை இருக்கலாமே?” என்று கேள்வி எழுப்பினர்.
பூடானில் குறைந்த விலை – இந்தியாவுக்கு என்ன காரணம்?
நீங்கள் நினைக்கலாம், “பூடானின் கரன்சி மதிப்பு இந்திய ரூபாயை விட அதிகமாக இருக்கலாம்” என.
ஆனால் உண்மை என்ன?
- பூடானில் இந்திய ரூபாய் அழகாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
- இந்திய ரூபாய் & பூடானின் நகுல்திரம் (BTN) மதிப்பு – ஒரே சமம்!
- அதாவது, இந்தியாவில் ₹100க்கு விற்கப்படும் பெட்ரோல், பூடானில் வெறும் ₹64க்கு கிடைக்கிறது!
“இந்தியாவில் விலை அதிகம் ஏன்?”
இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான மிகப்பெரிய வரி தான் இதற்குக் காரணம்!
- செஸ், மாநில வரிகள், மத்திய அரசு வரிகள் சேர்ந்து விலையை உயர்த்துகிறது.
- ஆனால் பூடானில் வரி குறைவாக இருப்பதால், பெட்ரோல் விலை மிகக் குறைவாக உள்ளது.
சரிவர வரிகள் இல்லையென்றால், இந்தியாவிலும் இதே விலையில் பெட்ரோல் கிடைக்கலாமா?
இதுதான் தற்போது இணையத்தில் விவாதமான கேள்வி.