குழந்தைகளின் உணவுமுறை பெரியவர்களினைவிட முற்றிலும் மாறுபட்டது. அவர்கள் ஆரோக்கியமாக வளரச் செய்ய, சரியான நேரத்தில் சரியான உணவுகளை வழங்குவது மிகவும் முக்கியம். ஆய்வுகள் காண்பிக்கும் படி, 1 வயதுக்கு முன்பே பழங்கள், காய்கறிகள், புரதச் சத்து நிறைந்த உணவுகளை அறிமுகப்படுத்துவது குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
ஒவ்வாமை ஏற்படும் உணவுகள்
முட்டை, வேர்க்கடலை, கடல் மீன், சோயா போன்ற உணவுகள் சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். ஆனால், இந்த உணவுகளை குறைந்த அளவில், மெதுவாக அறிமுகப்படுத்தினால், எதிர்காலத்தில் ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கும். இது குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கவும் உதவும்.
குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் முக்கியமான உணவுகள்
முட்டை – உயர்தர புரதம், வைட்டமின் A, D, E, இரும்புச் சத்து மற்றும் பயனுள்ள கொழுப்புகள் நிறைந்துள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
மீன் – குறிப்பாக டூனா, மத்தி, சால்மன் போன்ற மீன்கள், குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் விழித்திரைக்கு தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் DHA-வை வழங்கும். நீராவியில் வேகவைத்து கொடுக்கலாம்.
கீரைகள் – இரும்புச்சத்து நிறைந்த பசுமைத் தளிர்கள் குழந்தைகளின் இரத்தசோகை பிரச்சனைகளை தடுக்கும். குழந்தைகள் விரும்பும் முறையில் வெங்காயம், பூண்டு சேர்த்து சமையல் செய்யலாம்.
பெர்ரி பழங்கள் – பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் பெர்ரிகள் குழந்தைகளை கவரும். இதில் வைட்டமின் A, C மற்றும் நார்ச்சத்து அதிகம். இது எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் – குழந்தைகளின் உணவில் மஞ்சள், ஜாதிக்காய், துளசி, இலவங்கப்பட்டை போன்றவற்றை சிறிது அளவில் சேர்ப்பது உடலுக்கு நன்மை அளிக்கிறது. மிளகாய் தூளை தவிர்க்க வேண்டும்.
தயிர், சீஸ், வெண்ணெய் – லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ள குழந்தைகளுக்கு 8-10 மாதங்களிலிருந்து தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களை வழங்கலாம். இது கால்சியம் மற்றும் உடலுக்குத் தேவையான கொழுப்புகளை வழங்கும்.
ஓட்ஸ் – 7 மாதங்கள் கடந்த குழந்தைகளுக்கு ஓட்ஸ் கொடுக்கலாம். இதில் நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம் உள்ளதால், குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி சிறந்த செரிமானத்தை அளிக்கிறது.
முக்கிய கவனிக்க வேண்டியவை
குழந்தைகள் எந்த புதிய உணவையும் முதல் முறையாக சாப்பிடும்போது, அவதானித்து பார்க்க வேண்டும்.
ஒவ்வாமை ஏற்படுவதை உணர்ந்தால், அந்த உணவை உடனடியாக நிறுத்த வேண்டும்.
1 வயதிற்கு முன்பு தேவையற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, சமநிலையான உணவு முறையை பின்பற்றுவது அவசியம்.